யாழ். காங்கேசன்துறைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 45.27 மில்லியன் டொலர்கள் ( 6.9 பில்லியன் ரூபா) கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது. இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்வில் மேற்படி உடன்படிக்கையில் இந்தியாவும், இலங்கையும் நேற்றுப் புதன்கிழமை(10) கையெழுத்திட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் இலங்கையின நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி- சமரதுங்க, இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹா ஆகியோர் இணைந்து குறித்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது காங்கேசன்துறைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க இந்தியா இணங்கியிருந்தது. இதனையடுத்துக் கடந்த- 2011 ஜூலை மாதத்தில் இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இரு நாடுகளுக்குமிடையில் கையெழுத்திடப்பட்டது.
இந்நிலையில் காங்கேசன்துறைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கியிடமிருந்து 45.27 மில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக் கொள்ள இலங்கையின் அமைச்சரவை கடந்த-2017 ஆம் ஆண்டு மே மாதம் அனுமதி அளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment