//]]>

Tuesday, January 2, 2018

யாழ். ஏழாலையில் புதுவருடத்தை முன்னிட்டு இளைஞர்கள் முன்னெடுத்த இரத்ததானம்: ஓர் சிறப்புப் பார்வை(Videos, Photos)

புதுவருடத்தை முன்னிட்டு யாழ். ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வருடாந்த இரத்ததான முகாம் நேற்றுத் திங்கட்கிழமை(01)  யாழ். ஏழாலை புனித இசிதோர் ஆலய வளாகத்திலுள்ள புனித ஞானப்பிரகாசியார் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது. 

அமைப்பின் தலைவர் வே. மயூரதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு காலை-08 மணி முதல் பிற்பகல்-02.15 மணி வரை இடம்பெற்றது. 

இந்த இரத்ததான முகாமில் ஏழாலை மற்றும் அயற்பிரதேசங்களைச் சேர்ந்த 36 வரையான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி தானம் செய்தனர். இதன் போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக வருகை தந்து இரத்தம் பெற்றுக் கொண்டனர். 

குறித்த இரத்ததான நிகழ்வு முற்றுமுழுதாக இளைஞர்களின் ஏற்பாட்டிலும், பங்களிப்பிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாமாக முன்வந்து வருடாவருடம் இரத்ததானம் வழங்கி வரும் மேற்படி இளைஞர்களின் செயற்பாடு முன்னுதாரணமானது என ஊர்ப் பெரியவர்களும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரியும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

மேற்படி இரத்ததான நிகழ்வு தொடர்பாக ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பின் சார்பாக மதுரநாயகம் டினேஷ் எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில், 

ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பு புதுவருடத்தை முன்னிட்டு முன்னெடுத்துள்ள நான்காவது இரத்ததான முகாம் இதுவாகும்.  முற்றுமுழுதாக இளைஞர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெறுகிறது. இந்த வருட இரத்ததான முகாமில் ஏற்கனவே இரத்ததானம் வழங்கி வரும் பலருடன் புதிதாகவும் பலரும் முன்வந்து இரத்ததானம் வழங்கியுள்ளார்கள். அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தானத்தில் சிறந்தது இரத்ததானம் என்பதால் எதிர்வரும் காலங்களிலும் எமது செயற்பாட்டிற்கு அனைத்துத் தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு  வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம். இரத்ததான நிகழ்வுக்கு வருடாவருடம் ஒத்துழைப்பு வழங்கி எமக்கு ஊக்குவிப்பாக விளங்கும் தெல்லிப்பழை ஆதாரா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார். 

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின்  இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம. பிரதீபன் எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில், 

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின்  இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம. பிரதீபன் எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில், 

ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பினர் தாமாக முன்வந்து நான்காவது தடவையாகவும் இரத்ததான முகாம் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.  வழமையாக நாங்களாகத் தேடிச் சென்று நடாத்தும் இரத்ததான நிகழ்வுகள் தான் அதிகமாகவுள்ளது. 

இவ்வாறான நிலையில் ஏழாலை இளைஞர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் வழங்குவதையிட்டு இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி என்ற வகையில் நான் பெருமையடைகிறேன். தற்போதைய நிலையில் எமது வைத்தியசாலையில் இரத்தத்துக்கான தேவை அதிகமாகவுள்ள காரணத்தால்  ஏனைய இளைஞர்களும் இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தத்தமது பிரதேசங்களில் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்த முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டிக் கொண்டுள்ளார்.  
(செய்திக் கட்டுரையாக்கம் மற்றும் காணொளி:- செல்வநாயகம் ரவிசாந்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment