இந்த ஆண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு 163,104 மாணவர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில் நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளதாவது,
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான பத்திரங்கள் மற்றும் மாணவர்களுக்கான கையேடுகள் அடுத்தவாரம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஆண்டு சப்ரகமுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் புதிதாக மருத்துவ பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த இரண்டு மருத்துவ பீடங்களிலும் இந்த ஆண்டு சுமார் 150 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். றுகுணு பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கு மேலதிகமாகப் பத்து மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதன்படி, இந்த ஆண்டு மருத்துவபீடங்களுக்கு 160 மாணவர்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படுவர். மொத்தமாக மருத்துவபீடங்களுக்கு 1,476 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
களனிப் பல்கலைக்கழகத்தில் புதிதாகப் பொறியியல் பீடம் மற்றும் நிதியியல் கற்கைகள் பீடம் என இரு அலகுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தப் பீடங்களுக்கு சுமார் 50 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment