//]]>

Friday, February 2, 2018

14 பேர் கொண்ட சாரணர் குழு இந்தியா பயணம்: வடக்கிலிருந்து தமிழ்மாணவனொருவர் தெரிவு(Photo)

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் பச்மர்கியில் இன்று வெள்ளிக்கிழமை(02) ஆரம்பமாகும் சாரணர்களுக்கான 20 ஆவது 'International Adventure Programme' இல் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 14 பேர் கொண்ட சாரணர் குழுவொன்று நேற்று வியாழக்கிழமை(01) இந்தியா பயணமாகியுள்ளனர். இலங்கை சாரணர் சங்கம் மேற்படி பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

குறித்த குழுவில் 13 மாணவ சாரணர்களும், ஒரு பொறுப்பாசிரியரும் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் 12 மாணவ சாரணர்கள் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மூன்று தமிழ் மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில் வடக்கு மாகாணத்தில் யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்கும் ஜனாதிபதி சாரணான செ.சசிகாந் குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்குத் தெரிவாகியுள்ளார்.

மற்றும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த முத்துக்குமார் ரவீந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஹர்சன் ஆகிய இரு தமிழ் மாணவ சாரணர்களும் இடம்பெற்றுள்ளனர். குறித்த குழுவினர் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் நேற்றைய தினம் காலை இந்தியா புறப்பட்டுச் சென்றனர். 
                       (இந்தியா செல்லும் தமிழ் மாணவர்கள்)
இதேவேளை, இன்று ஆரம்பமாகும் குறித்த நிகழ்வு எதிர்வரும்- 08 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக ஏழு தினங்கள் இரவு பகல் நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளன. மலை ஏறுதல் உள்ளிட்ட பல வீரசாகசங்களும் இந்த ஏழுநாள் நிகழ்வுகளில் உள்ளடங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

(எஸ்.ரவி-)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment