பொலநறுவையில் நேற்று வியாழக்கிழமை(01)நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்கள் மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வரவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் எனக்குச் சுகாதார அமைச்சர் பதவி கிடைத்ததன் பின்னர் மத்திய வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்தேன். இதன் போது அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் அமைச்சர்கள் கருத்து வௌியிட்டனர்.
மறுநாள் காலை முன்னாள் ஜனாதிபதி என்னை அலரி மாளிகைக்கு வருமாறு அழைத்தார். என்னை முறைத்துப் பார்த்த முன்னாள் ஜனாதிபதி நீங்கள் கட்சியின் செயலாளர் அத்துடன் அமைச்சராகவும் உள்ளீர்கள். எவ்வாறு அரசாங்கத்தில் ஊழல் மோசடி? என்று பேசுவீர்கள் எனக் கேட்டார்.
கட்சியின் செயலாளருக்கும், அமைச்சருக்கும் ஊழல் மோசடிகள் தொடர்பில் பேச முடியாது எனவும், வேறொரு பயணத்தை முன்னெடுக்கவா தயாராகின்றீர்கள்? எனவும் கேட்டார்.
அன்று நான் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். ஊழல் மோசடிகளுக்கு எதிராகப் பேச முடியாமலிருந்தால் வேறொரு பயணம் செல்ல வேண்டும் என தீர்மானித்தேன் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment