காதலர் தினமான இன்று புதன்கிழமை(14) பிற்பகல் யாழ். ஏழாலை தெற்குப் பகுதியில் திடீரெனப் பொலிஸார் வீதியில் குவிக்கப்பட்டமையால் அப்பகுதியில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் பத்திற்கு மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பொலிஸார் திடீரென வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில் வீதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்கள் இடைநிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதுடன் வாகன ஆவணங்களும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன.
பொலிஸாரின் திடீர் நடவடிக்கையால் வீதியால் ஜோடியாகச் சென்ற காதலர்கள் பாதிப்பினை எதிர்கொண்டதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment