யாழ். மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஈ.பி.டி.பியும், ஐக்கிய தேசியக் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன
வட, கிழக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெறவில்லை. இதனால்,தொங்கு நிலையிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் பிற கட்சிகளின் ஆதரவுடனேயே நிர்வாகம் நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகத் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்து சிவில் சமூகத்தினால் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் அதிகபட்சமாக 16 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க பத்து ஆசனங்களைக் கொண்ட ஈ.பி.டி.பியும், மூன்று ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியும் முன்வந்துள்ளன.
0 comments:
Post a Comment