பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிடின் கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்குப் பின்னால் நிற்க முடியாத நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.எனவே, கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகிச் சுதந்திரமாகச் செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுடன் எமக்கு எந்த மனக்கசப்புக்களும் கிடையாது. ரணில் விக்கிரசிங்க இல்லாத எந்தவொரு அரசாங்கத்துக்கும் நாம் ஆதரவளிப்போம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 41 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 35 பேர் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என உறுதியளித்துள்ளனர்.” என்று கூறினார்.
0 comments:
Post a Comment