உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள நிலைமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி விஷட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி தனது விஷேட உரையை நிகழ்த்துவார் என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவிருக்கும் அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இனிமேல் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment