மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(10) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.
இதன்பிரகாரம், நாளை சனிக்கிழமை(10) காலை- 09 மணி முதல் மாலை-06 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை, நாயாறு, கொக்குத் தொடுவாய், கருநாட்டங்கேணி, கொக்கிளாய், கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, சிலாவத்தை, உடுப்பிக்குளம், அளம்பில், குமுழமுனை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment