//]]>

Monday, February 12, 2018

மோசமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுடன் இணைந்து செயற்படப் போவதில்லை!: கஜேந்திரகுமார் உறுதி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  விட மோசமான கொள்கைகளைக்  கொண்ட கட்சிகளோடு நாம் ஒருபோதும் இணைந்து செயற்படப்  போவதில்லை எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்ணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11)  ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒற்றையாட்சியைத் தமிழர்களுக்குத் திணிக்க முயன்று தமிழர்களை நடுத்தெருவில் விடப்படுவதற்குக் காரணமாகவிருந்த தமிழ்த்தேசியக்  கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் மாத்திரமே எமது முடிவுகளை மீள்பரிசீலனை செய்ய முடியும்.

ஒற்றையாட்சியைத் தமிழர்களுக்கு திணிக்க முயன்றவர்களை தவிர்த்து சமஸ்டியுடன் இணைந்து பயணிக்க விரும்புவர்களுடன்  இணையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment