கம்பஹா நெதகமுவ – போகஸ் ஹந்திய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(04) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரவல் மணல் விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதமே குறித்த சம்பவத்துக்குக் காரணமென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்தவர் 34 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments:
Post a Comment