//]]>

Sunday, February 4, 2018

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவை

எதிர்வரும்-10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும்-07 ஆம் திகதி விசேட போக்குவரத்துச் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்துப் பிரதிப் பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்காக தேர்தல்கள் திணைக்களத்தினால் வாகனப் போக்குவரத்து வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பதற்கென  ​தேர்தல்கள் திணைக்களத்தினால் இலவச போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment