//]]>

Sunday, February 4, 2018

யுத்தக் குற்றங்களை மறக்க வேண்டுமாம்!: சொல்கிறார் வடக்கு ஆளுநர்


தற்போது போர் முடிவடைந்து விட்டது. எனவே, இலங்கையில் போரின் போது யுத்தக் குற்றங்களை மறந்து இந்த நாட்டில் அனைத்து மக்களும் சமாதானமாக வாழ வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் மூன்று அரசியல் கைதிகளின் உறவினர்களை நேற்றைய தினம்(03) சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் நடைபெற்ற போரால் சிங்கள மக்களும், தமிழ்மக்களும் மிகவும் வேதனையடைந்தனர். இப்போது அனைத்து மக்களும் ஒருதாய் பிள்ளைகளாக இந்தத் தேசத்திற்கு விடுதலை கொண்டுவர வேண்டும்.

போர்க்காலத்தில் இடம்பெற்றவைகளையெல்லாம் நாம் மறக்க வேண்டும். அவற்றை நெஞ்சில் வைத்துக் கொண்டு கோபத்தில் செய்பவைகளால் எந்தப் பயனுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment