//]]>

Sunday, February 4, 2018

யாழில் தமிழ்ப்பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிளேட் வெட்டு:காரணம் வெளியானது

யாழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரொருவரை  மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் பிளேட்டினால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை(03) இரவு  மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மேற்படி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது வேலையை முடித்துக் கொண்டு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் கையில் பிளேட்டினால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 24 வயதான யோ.தர்சினி என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இதன் போது
காயமடைந்தவராவார். 

தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையே இந்த பிளேட் வெட்டுக்கான காரணமெனத் தெரியவருகிறது.

(தமிழின் தோழன்-)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment