ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்றுத் திங்கட்கிழமை(12) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்துப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியி்ருந்தனர்.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதையடுத்துக் கூட்டு அரசாங்கத்திலிருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரந்துபட்ட எதிர்க்கட்சி அணியை வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment