//]]>

Tuesday, February 13, 2018

தனித்து அரசாங்கம் அமைக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பத்து அமைச்சர்களின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நடாத்தியிருப்பதாக அலரி மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதாரண பெரும்பான்மை பலத்தைக் காண்பிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த குழு ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளனர். இதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக அமைந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள குறித்த அமைச்சர்கள் குழு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment