//]]>

Sunday, February 4, 2018

70 ஆவது சுதந்திர தினத்தின் யாழ். மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு(Photos)


இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் யாழ். மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(04) முற்பகல் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.

இதன் போது பொலிஸார், முப்படையினர் ஆகியோரின்  விசேட அணிவகுப்புக்கள், பாடசாலை மாணவ, மாணவிகளின் கலாசார அணிவகுப்புக்கள் என்பன சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் தமிழ், சிங்கள மொழிகளில் தேசியகீதம் இசைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

அத்துடன் 70 ஆவது சுதந்திரதினத்தை நினைவு கூரும் வகையில் பயன்தரு மரக்கன்றுகளும் யாழ். மாவட்டச் செயலக வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(தமிழின் தோழன்-)






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment