//]]>

Friday, February 2, 2018

இலங்கை ஊடகப் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழில் இலவசக் கருத்தரங்கு

இலங்கை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இயங்கிவரும் இலங்கை ஊடகப் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ் ஊடகவியலாளர்கள் ,கலைஞர்கள் மற்றும் துறைசார் ஆர்வலர்களுக்கான இலவசக்  கருத்தரங்கு இந்த மாதம்- 18 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை  யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம்  பிரதான  வீதியிலுள்ள குடும்ப நல மருத்துவ நிறுவன மண்டபத்தில் காலை-09 மணி முதல் முற்பகல் -11 மணிவரை இடம்பெறவுள்ள குறித்த இலவசக் கருத்தரங்கில் தமிழ் ஊடகத்துறையை மேம்படுத்தவும், தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டும் இளம் ஊடக ஆர்வலர்களின் வழிகாட்டுதல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன .

இந்தக் கருத்தரங்கில் ஊடகத்துறையைத் தேர்வு செய்து  கற்கும்  பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் , ஊடகத் துறையில் இணைய விரும்பும்  ஆர்வலர்கள் , ஊடகங்களில் பணி புரியும் ஊடகவியலாளர்கள் மற்றும் துறை சார்ந்தோரைத் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த இலவசக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 011 2685720 மற்றும் 011 2692507 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து தங்கள் வரவினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment