//]]>

Saturday, February 3, 2018

வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதி

நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அநுராதபுரம் சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள்  இன்றையதினம்(02) வவுனியா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.   கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மதியரசன் சுலக்சன் கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அவர்களின் வழக்குகளைச் சட்டமா அதிபர் திடீரென அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிராகக்  கோரிக்கைகளை முன்வைத்து மீளாய்வு மனுவொன்று வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சட்டத்தரணி சந்திரலால் ஊடாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த செப்ரெம்பர் மாதம்- 26 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீதான விசாரணைகள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பிலும், அரசியல் கைதிகள் சார்பிலும் சட்டத்தரணியால்  மேற்கொள்ளப்பட்ட வாதங்கள் தொடர்ச்சியாக கருத்தில் கொள்ளப்பட்டு இன்றைய தினம் குறித்த மனுவுக்குரிய சாதகமான தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment