நாளை(10) இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாதோரும் வாக்களிக்க முடியுமெனத் தேர்தலைக் கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
வாக்களிப்புத் தினமான நாளைய தினம் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிப்பது அவசியம். தேர்தலில் வாக்களித்துப் பயனில்லை என வீட்டிலிருந்து விடாது வாக்களிக்க வேண்டும்.
இல்லாவிடில் உங்கள் சபைக்கு வேண்டத்தகாதவர்கள் உறுப்பினர்களாகி விடுவர் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment