//]]>

Sunday, February 11, 2018

கூட்டமைப்பின் கோட்டையான குப்பிளானில் தமிழ்த்தேசியப் பேரவை வேட்பாளர் வெற்றி(Photo)

யாழ். வலிகாமம் தெற்குப் பிரதேசசபைத் தேர்தலில் குப்பிளானில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை சார்பில் போட்டியிட்ட சோமலிங்கம் ஜீவானந்தன் வெற்றி பெற்றுள்ளார்.

இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில்  வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்காக சோமலிங்கம் ஜீவானந்தன் குப்பிளான் நான்காம் வட்டாரத்தில் போட்டியிட்டார். இவர் யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் சேவை நோக்கம் கொண்ட இளைஞனுமாவார்.
குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் நேற்றைய தினம்(110) பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் வாக்காளர்களின் வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில் குப்பிளானில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் புளொட் அமைப்பு சார்பாக தேர்தலில் நிறுத்தப்பட்ட  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு- தமிழ்த்தேசியப் பேரவை ஆகிய தமிழ்க் கட்சி வேட்பாளர்களிடையே கடுமையான போட்டி நிலவியது.

எனினும் , வாக்களிப்பு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இறுதிநேரத்தில் தமிழ்த்தேசியப் பேரவை சார்பில் போட்டியிட்ட சோமலிங்கம் ஜீவானந்தனுக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் போட்டியிட்ட இளைஞருக்கும்   இடையில் போட்டி நிலவியது.

வாக்கெண்ணும் பனியின் முடிவில்  தமிழ்த்தேசியப் பேரவை சார்பில் போட்டியிட்ட சோமலிங்கம் ஜீவானந்தன் மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் போட்டியிட்ட இளைஞர் ஆகிய இருவரும்  தலா 314 வாக்குகளைப் பெற்றிருந்தார்கள். இதனையடுத்து  யாழ். மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகரும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபருமான நாகலிங்கம் வேதநாயகன் சீட்டுக் குலுக்கலின் நடாத்தி தமிழ்த்தேசியப் பேரவையின் சார்பில் போட்டியிட்ட சோமலிங்கம் ஜீவானந்தன் வெற்றி பெற்றதாக இன்று அதிகாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்து வந்த குப்பிளானில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் கிராம சேவகரை வீழ்த்தி  தமிழ்த்தேசியப் பேரவையின் சார்பில் போட்டியிட்ட சோமலிங்கம் ஜீவானந்தனை குப்பிளான் வாக்காளர்கள் வெற்றி பெற வைத்தமை வரலாற்றுச் சாதனையாகும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீதான கடும் அதிருப்திகளும், குப்பிளான் இளைஞர்களின் ஒன்றிணைந்த சக்தியுமே இதற்கான காரணமாகும்.

இதேவேளை,  வலிகாமம் தெற்குப் பிரதேச சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியப் பேரவையின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோமலிங்கம் ஜீவானந்தனுக்கு எமது இணையத்தளம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதுடன் கிராம அபிவிருத்திக்காக முன்னின்று உழைக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

(எஸ்.ரவி-)









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment