வட- கிழக்கில் நேற்றுச் சனிக்கிழமை(10) நடைபெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்கும் நிலையில் இல்லை. புதிய கலப்புத் தேர்தல் முறை காரணமாக வட்டார முறையில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும்பாலான இடங்களில் அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.
சிறிய கட்சிகளும், தேசியக் கட்சிகளும் வட- கிழக்கில் விகிதாசார ஒதுக்கீட்டில் கணிசமான ஆசனங்களை வென்றுள்ள போதும் யாழ். மாநகர சபை உள்ளிட்ட பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் தொங்கு சபைகளே அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment