அம்பாறை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் விமானங்கள் வழமைக்கு மாறாக வானில் வட்டமிடுவதாகத் தெரிவித்துச் சிலர் தேவையற்ற தகவல்களைப் பரப்பி வருவதாகத் தெரிவித்திருக்கும் பொலிஸார் இது தொடர்பான உண்மைத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக விமானப்படை பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மார்ச் மாதம் முதல் வாரம் விமானப்படையினரின் கண்காட்சியுடன் கூடிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளமையால் அதற்கான பயிற்சிகள் இடம்பெறுவதாகவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment