யாழ். நகரில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(27) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள வருகை தந்த யாழ். மானிப்பாய்ப் பகுதியைச் குடும்பஸ்தரொருவர் அங்கு நடைபாதை ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரியொருவரின் கஸ்ர நிலைமையை உணர்ந்து அவருக்கு உதவி செய்ய எண்ணியுள்ளார்.
இதனையடுத்துத் திடீர் வியாபாரியாக மாறிய அவர் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த தனது கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் அவர்களுக்கு ஆடைகளை விற்பனை செய்துமுள்ளார்.
குறித்த வியாபாரியை சற்று ஓய்ந்திருக்கச் செய்த அவர் சுமார்-20 நிமிடங்களுக்குள் 5000 ரூபா பெறுமதியான ஆடைகளை விற்பனை செய்து அதன் மூலம் பெறப்பட்ட பணத்தை மேற்படி நடைபாதை வியாபாரியிடம் பத்திரமாகச் சேர்ப்பித்துள்ளார்.
கைமாறு எதுவும் கருதாது பொதுநோக்குடன் குறித்த பொதுமகன் செயற்பட்ட விதம் அங்கு நின்றிருந்த பலரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment