//]]>

Wednesday, February 7, 2018

சுன்னாகத்தில் பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கல்வீச்சு(Photo)

வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  இன்று புதன்கிழமை(07)  பிற்பகல் முதல் யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது இனம் தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பை வழங்கியிருந்த போதிலும் அதனையும் மீறி அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இன்று இரவு-08 மணியளவில் குறித்த கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக செய்திகளை எமது செய்திச் சேவையில் எதிர்பாருங்கள்....

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment