அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்கும், சைக்கிள் சின்னத்துக்கும் உரித்துடையவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பேரன் ஜி.ஜி.பொன்னம்பலமே! தன் பேரனின் பெயரை எந்தத் தேர்தலிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாவித்தமை கிடையாது. தன் பேரனின் பெயரை இருட்டடிப்புச் செய்யும் கஜேந்திரகுமார் எவ்வாறு தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை ஏமாற்றாமல் பெற்றுத் தருவார்? என வலி.தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான தி.பிரகாஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்.ஏழாலையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட போது இவர்கள் அந்தத் தேர்தலை எதிர்த்தார்கள். மாகாண சபையில் எந்த அதிகாரமும் இல்லை என்றார்கள். தற்போது மாகாண சபையின் கீழ் செயற்படும் உள்ளூராட்சித் தேர்தலில் எதற்காகப் போட்டியிடுகின்றார்கள்.
தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் படத்தைத் தமது தேர்தல் கால விளம்பரங்களில் பயன்படுத்தத் தமிழ்த் தேசியப் பேரவை என இந்தத் தேர்தலில் வந்திருக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்கிற தமிழ்த் தேசிய மக்கள் பேரவையினர் என்ன மாற்றம் கோருகின்றார்கள்? ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு பெயர்களை மாற்றிக் கொள்கிறார்களே. அந்த மாற்றத்தையா? அவர்கள் மாற்றம் என்கின்றார்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment