//]]>

Thursday, March 1, 2018

இதுவோர் முக்கிய நகர்வு!:அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்

காணாமற் போனோர் பணியகத்துக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது முக்கியமானதொரு நகர்வு என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

காணாமற் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(28) நியமனக் கடிதங்களை வழங்கியிருந்தார்.

இது குறித்து அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தமது கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துப் பகிர்வில் தெரிவித்துள்ளதாவது,

வலுவான, சுதந்திரமான, காணாமல்போனோருக்கான பணியகத்தின் உருவாக்கமானது இலங்கையின் அனைத்து மக்களுக்கும் குறிப்பாகத் தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான பதிலைத் தேடுகின்ற மக்களுக்கு நிலையான அமைதி, மீள நிகழாமை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கு ஒரு முக்கியமான நகர்வாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment