//]]>

Tuesday, March 6, 2018

கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

கண்டி மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (06) இரவு-08 மணியிலிருந்து நாளை(07) காலை-06 மணிவரை அமுலிலிருக்குமெனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் திகண,தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் சிங்கள- முஸ்லீம் மக்களுக்கிடையே நேற்றைய(05) தினம் இடம்பெற்ற இனமுறுகலையடுத்து நேற்றுப் பிற்பகல் முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை முதல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment