//]]>

Tuesday, March 6, 2018

வடமராட்சியின் சில பகுதிகளில் நாளை மின்தடை



மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் வடமராட்சிப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். 

இதன்படி, நாளை காலை-08 .30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவளை, மருதங்கேணி ,வத்திராயன், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

(எஸ்.ரவி-)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment