//]]>

Thursday, November 17, 2016

இனிமையாகப் பழகினாலே இறை அருளைப் பெறலாம்


சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளையும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸும் இணைந்து, ரவிச்சந்திரன் கணபதிதாசனின் திருமூலர் குறித்த சிறப்பு சொற்பொழிவை, கடந்த ஞாயிறன்று வடபழநி சாந்தநாயகி உடனுறை வேங்கீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர். `கற்றலினும் கேட்டல்’ நன்று என்னும் முதுமொழி முற்றிலும் உண்மையானது என்பதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்தது திருமூலர் குறித்த அன்றைய சொற்பொழி.

பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை திருமந்திரம். ஆண்டுக்கு ஒரு பாடலாக 3 ஆயிரம் ஆண்டுகளில் 3 ஆயிரம் பாடல்களை திருமூலர் படைத்தார் எனச் சொல்லப்படுகிறது. அந்த திருமந்திரப் பாடல்களிலிருந்தும் திருக்குறள், ஆதிசங்கரர், ஆண்டாள், தேவாரப் பாடல்கள் என பலரின் பாடல்களையும் துணை கொண்டு, குறுகிய நேரத்துக்குள் திருமந்திரத்தின் சிறப்பையும் அந்தப் பாடல்களில் பொதிந்திருக்கும் தத்துவங்களையும் சுருங்கச் சொல்லி விளக்கினார் சொற்பொழிவாளர் ரவிச்சந்திரன் கணபதிதாசன்.

நான்கும் மூன்றும்

திருமந்திரத்தைப் பாடுவதற்கும் ஓதுவதற்கும் எனக்கு முறையான பயிற்சி இல்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். படித்தாலே போதும். அதற்குரிய பலன் நிச்சயம் உண்டு. திருமந்திரம் நம்மை அறிவு, கடவுள் சிந்தனை, மகிழ்ச்சி, வளம் என்னும் நான்கு நிலைகளில் உயர்த்துகிறது. மந்திரம், தந்திரம், மருத்துவம் ஆகிய மூன்றையும் நமக்கு அளிக்கிறது. சக மனிதரிடத்தில் இனிமையாகப் பழகுவதே இறைவனை அடையும் எளிய வழியாக திருமந்திரம் சொல்கிறது என்றார் முத்தாய்ப்பாக சொற்பொழிவாளர் ரவிச்சந்திரன் கணபதிதாசன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment