யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் இந்த மாதம்-30 ஆம் திகதி வரை யாழ்.நீதவான் நீதிமன்றத்தால் இன்று வெள்ளிக்கிழமை(16) நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம்-21 ஆம் திகதி யாழ்.பல்கலைக் கழகத்தின் கலைப்பீட மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் வைத்துப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியாகியிருந்தனர்.
இதன் எதிரொலியாக சந்தேகநபர்களான ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் மீதான வழக்கு விசாரணை யாழ்.நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் மீண்டும் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்குத் தொடர்பான குற்றப் பத்திரிகையைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் சமர்ப்பித்திருந்தனர்.
வழக்குத் தொடர்பான குற்றப் பத்திரிகையைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் சமர்ப்பித்ததுடன், வழக்கைப் பிறிதொரு தினத்திற்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் ஐவரினதும் விளக்கமறியல் நீடித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment