தென்னை பயிர்செய்கை சபையினால் தென்னை பயிர்செய்கைக்கு ஐந்து ஏக்கர் தொடக்கம் ஐம்பது ஏக்கர் வரையில் பல்வேறு வகையான மானியங்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் மக்கள் அதனை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என வட பிராந்திய முகாமையாளா் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தென்னை பயிர்ச்செய்கை சபையினால் வழங்கப்படுகின்ற மானியத்திட்டத்திற்கு 400 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்து.
இவர்களில் முதற்கட்டமாக 200 பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கூறுகையில், தென்னை பயிர்செய்கை சபையினால் பல்வேறு மானியத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறன.
குறிப்பாக புது மரநடுகை, புனரமைப்பு என்பவற்றுக்கு தென்னை கன்றுகளை மானியமாக வழங்குப்படுகின்றது. ஊடு பயிர்செய்கைக்கு ஏக்கருக்கு பதினையாயிரம் ரூபா வீதம் ஐந்து ஏக்கர் தொடக்கம் ஐம்பது ஏக்கர் வரை பெற்றுகொள்ள முடியும்.
இதேவேளை, வறட்சியை தாங்குவதற்காக மண், நீர் பாதுகாப்பு,பொச்சு மட்டை குழி என்பவற்றுக்கும் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபா வீதம் வழங்குகின்றோம்.
உரம் பயன்பாட்டுக்கு ஒரு மரத்திற்கு 55 ரூபா வீதம் எத்தனை மரங்களுக்கும் பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை இந்தப் பிரதேசத்தில் மக்னீசியம் குறைபாடு காணப்படுவதனால் டெலமைற் பசளை மானியம் வழங்கப்படுகிறது.
அத்தோடு, விலங்கு வளர்ப்பு மானியம் அதாவது மாடு வளர்ப்பு ஒரு விலங்கு வளர்ப்புக்கு ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படுகிறன.
நீர்ப்பாசனம் மானியமாக ஒரு ஏக்கருக்கு 8000 ரூபா பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பல மானியத்திட்டங்களுடன் தென்னை பயிர்செய்கை சபை செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் மக்கள் இந்த மானியத்திட்டங்களை பெற்று தென்னை பயிர்செய்கையை மேற்கொள்ளவதாக தெரியவில்லை.
தென்னை பயிர்செய்கையை மேற்கொள்கின்றவர் தனது சொந்த பணத்தில் செலவு செய்யாது இவ்வாறான மானியங்களை பெற்றே தென்னை பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும்.
மாவட்டத்தில் உள்ள தென்னை பயிர்செய்கையாளர்கள் பிராந்திய கமநல சேவை நிலையங்களில் உள்ள எங்களது உத்தியோகஸ்தர்களை தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுகொள்ள முடியும்.
இந்த நிகழ்வில் தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர் கபில கண்டவல, கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன், தென்னை பயிர்செய்கை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சத்தியேந்திரன் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment