//]]>

Tuesday, December 19, 2017

கைத்தொலைபேசி மூலம் விடைகள் எழுதிய க.பொ.த சாதாரண தர மாணவன்


கைத்தொலைபேசியில் தகவல் பெற்றுக் க.பொ. த சாதாரண தரப் பரீட்சை வினாக்களுக்கு விடையெழுதிய மாணவரொருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினம் நடைபெற்ற கணிதப் பரீட்சையின் போது குறித்த மாணவர் கைத்தொலைபேசியின் ஊடாக விடைகளைப் பெற்று எழுதிக் கொண்டிருந்த நிலையில் பரீட்சைக் கண்காணிப்பாளரால் கண்டறியப்பட்டுள்ளார். 

 அனுராதபுரம் பாடசாலையொன்றிலுள்ள பரீட்சை நிலையத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment