யாழ்.நகரின் மையப் பகுதியில் புளொட் மூத்த உறுப்பினரொருவர் தங்கியிருந்த வீடொன்றிலிருந்து துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீடொன்றிலிருந்து அந்த அமைப்பின் மூத்த உறுப்பினரொருவர் தற்போது அடாத்தாகத் தங்கியிருந்துள்ளார்.
வெளிநாட்டிலுள்ள குறித்த வீட்டின் உரிமையாளர் வீட்டை மீட்டுத் தருமாறு யாழ். நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக முறையிட்டிருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த வீட்டில் தங்கியிருந்தவரை யாழ். பொலிஸார் இன்று வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கமைவாக அங்கிருந்த பொருட்களை அகற்றிய போது அலுமாரியொன்றுக்குள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, மானிப்பாயைச் சேர்ந்த புளொட் உறுப்பினரான சிவகுமார் (வயது- 55) கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
0 comments:
Post a Comment