//]]>

Thursday, December 7, 2017

தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையின் வழி உதயமானது தமிழ் தேசிய பேரவை

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நேற்று மற்றொரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவை என்று பெயரில் இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டுதமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது.
பெயர் :  தமிழ்த் தேசியப் பேரவை -த.தே.பே. (TamilNational Council–T.N.C)

இலக்கு: தமிழ் மக்கள் பேரவையினால் 10.04.2016 ஆந் திகதிவெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியைபெற்றுக் கொள்வதையும் இலக்காககொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த்தேசியப் பேரவை) செயற்படும்.
எதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பொதுச்சின்னத்தை பெறமுடியாதநிலை ஏற்பட்டுள்ளமையினால் மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிடும்.
எதிர்காலத்தில் தமிழ்த்தேசியப் பேரவை (TamilNational Council–T.N.C.) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும்.
இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பொது அமைப்புக்கள் தமது சுயாதீனத்தை பேணிக்கொள்ள முடியும்.

மேற்படி விடயங்களை வாசித்து விளங்கிக் கொண்டு அதனை ஏற்று 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 06ஆம் நாள் (06.12.2017)  இப்புரிந்துணர்வு உடன்படிக்கை இதன் கீழ் கையொப்பமிடும் அமைப்புக்களால் கைச்சாத்திடப்படுகின்றது.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை  இயக்கம், மற்றும் பொதுஅமைப்புக்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment