இலங்கையில் பியர் விலைக் குறைப்புக்கு எதிராக நல்லொழுக்க அன்னையர் முன்னணி ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (08.12.2017) வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பியர் விலையைக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஜனாதிபதி தொடக்கம் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்படி முன்மொழிவு தொடர்பாக நாடாளுமன்றில் நாழி சனிக்கிழமை (09) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதற்கு எதிரான போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அன்னையர் முன்னணியினர் தெல்லிப்பழை தாய்மார் கழகங்களுடன் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் தாய்மார்கள், இளம் பெண்கள், தெல்லிப்பழை சுகாதாரப் பிரிவினர்சின்னஞ் சிறார்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த போராட்டத்தில் போதைக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய வாசகங்களையும், பதாகைகளையும் தாங்கியிருந்ததுடன் "மது, புகை போதையற்ற தேசத்தை உருவாக்குவோம்" என்ற உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டனர்.
0 comments:
Post a Comment