எதிர்வரும் ஜனவரி-27 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு கோலாகலமாக இடம்பெறவுள்ளது. குறித்த மாநாட்டு விழாவை முன்னிட்டு ஏற்பாட்டுப் பணிகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது என உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகத்தவர்கள் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் (18) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால போர்க்காலச் சூழலுக்குப் பின்னர் உறங்கு நிலையில் காணப்படும் கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றைப் புத்துயிர் பெற வைக்கும் நோக்குடன் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த மாநாட்டின் போது அழிவடைந்து சென்று கொண்டிருக்கும் தமிழர்களின் கலைகளான நாட்டுக் கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம், பாரம்பரிய நடனங்கள் போன்ற பல்வேறு கலைவடிவங்கள் மேடையேற்றப்படும்.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக மாநாட்டு சிறப்பு மலரொன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. அத்துடன் கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றில் சிறந்து விளங்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் விசேடமாகக் கெளரவிக்கப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு உபகுழுக்கள் நிறுவப்பட்டுள்ளன என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment