//]]>

Tuesday, January 2, 2018

வெடுக்கு நாறிமலையை புத்தரிடம் இருந்து காத்த தமிழ்மக்கள்: சிவலிங்கம் வைத்து வழிபாடு (Photos)



வவுனியாவில் எல்லைக் கிராமமத்தில் உள்ள வெடுக்கு நாறிமலையில் நேற்றைய தினம் 01.01.2018 சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த மலையானது சிங்கள பௌத்த அச்சுறுத்தல் நிறைந்ததாய் இருந்துவந்த நிலையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் புத்த சிலை ஒன்றினை இங்கே வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் பிரதேச இளைஞரின் எதிர்ப்பினை அடுத்து அம் முயற்சி கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொங்கல் நிகழ்வில் பிரதேச மக்கள், இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா பிரஜைகள் குழுவின் முன்னாள் தலைவரான தேவராசா ஆகியோரும் பங்கேற்று இருந்தனர். 

முன்னதாக மலை உச்சியில் பிள்ளையார் மற்றும் வைரவர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபட்டுவந்த நிலையில் இன்று சிவலிங்கத்தின் சிலை வைக்கப்பட்டு விசேட பொங்கல் வழிபாடு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment