சைவசமய நெறிமுறைகளுக்கமைவான ஆலய வழிபாட்டில் பெண்கள் பொதுவாக அடியளித்து நேர்த்திக் கடன் நிறைவேற்றும் முறையைக் காலாகாலமாகக் கைக்கொண்டு வருகின்றனர். பிரதட்டை என்று சொல்லப்படுகினற அங்கப் பிரதட்சண நேர்த்தி வழிபாடு ஆண் அடியவர்களாலேயே நிறைவேற்றப்படுவது மரபாக இருந்து வருகிறது.
ஆனால், யாழ்.வலிகாமத்தில் பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான யாழ்.ஏழாலை தெற்கு வசந்தபுரம் களபாவோடை வசந்தநாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்றைய தினம்(30) இடம்பெற்ற போது நடுத்தர வயதுப் பெண் அடியவர்கள் இருவர் தேர் பவனியின் பின்னால் பிரதட்டை எடுத்து அங்கு கூடியிருந்த பலரையும் ஆச்சரியப்படுத்தினர்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment