இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி செயலக அதிகாரியொருவரினால் நடாத்தப்பட்டு வரும் இணையத்தளமொன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி ஆணைக் குழுவுக்குப் பொய்ச் சாட்சியம் அளித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குப் பொய்ச்சாட்சியம் அளிப்பது மோசமான குற்றமெனவும், இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுபவர் குறைந்தது மூன்று மாதங்கள் வரை பிணையில் வெளிவர முடியாது எனவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment