யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் சிலை திறப்பு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை-09 மணி முதல் கல்லூரியின் ஆ.சி. நடராசா அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் வே. த. ஜயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் முதன்மை விருந்தினராகவும், வலிகாமம் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நா. காண்டீபன், ஒட்டிசுட்டான் உதவிப் பிரதேச செயலர் செல்வி- இ. ஜெகநாதசர்மா ஆகியோர் ஏனைய விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
இதன் போது யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் நிறுவுனர்களான அமரர்- ஈழகேசரி நா. பொன்னையா, அமரர்- சட்டத்தரணி வல்லிபுரம் இராசநாயகம் ஆகியோரின் உருவச் சிலைகள் கல்லூரி முன்றலில் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.
தொடர்ந்து கல்லூரியின் 71 ஆம் ஆண்டு பிறந்தநாள் கேக்கினை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் சம்பிரதாயபூர்வமாக வெட்டியதுடன் மாணவ, மாணவியருக்கு கேக்கும் பரிமாறினார். இதன் போது 'வயவன்' சஞ்சிகையின் 16 ஆவது மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கல்லூரியில் கல்வித்துறை மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டனர்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment