உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப்பிரிவில் முதலிடம் பெற்றுச் சாதனை நிலைநாட்டிய யாழ்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் மாணவனான சிறிதரன் துவாரகனுக்கு இன்றைய தினம்(02) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன்பணப் பரிசில் வழங்கிக் கெளரவித்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை(02) முற்பகல் யாழ். பருத்தித்துறையிலுள்ள மாணவனின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற மேற்படி உறுப்பினர்கள் மாணவனின் சாதனையைப் பாராட்டிப் பணப்பரிசில் கையளித்ததுடன், கைகுலுக்கி வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
இதேவேளை, மேற்படி மாணவனின் கல்விச் சாதனையைப் பாராட்டித் தினமும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment