யாழ். கொழும்புத்துறைப் பகுதிக்கு நேற்றுத் திங்கட்கிழமை(01) விஜயம் செய்த தமிழ்த் தேசியப் பேரவையினர் துறைமுகப் பகுதியில் பொதுமக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கள ஆய்விலும் ஈடுபட்டனர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவை போட்டியிடத் தீர்மானித்துள்ளது. “தூய கரங்கள் - தூய நகரம்" எனும் கோஷசத்தை முன்னெடுத்துத் தனது தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசியப் பேரவையினர் நேற்றைய தினம் கொழும்புத்துறைத் துறைமுகப் பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு தூய்மைப்படுத்துதல் மற்றும் மீனவர்களுக்கான இறங்குதுறையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அப்பகுதி மக்களுடன் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் வேட்பாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவினருடன் இணைந்து எதிர்காலத்தில் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கள ஆய்விலும் தமிழ்த் தேசியப் பேரவையினர் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment