//]]>

Wednesday, January 31, 2018

நீர்வேலி கந்தசுவாமி தோரண வாயில் ஆறு.திருமுருகனால் திறந்து வைப்பு(Photos)

யாழ்.நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்தின் அமைவிடத்தைக் குறிக்கும் வகையில் பருத்தித்துறை பிரதான வீதியிலிருந்து நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்குத் திரும்பும் முகப்பில் அமைக்கப்பட்ட தோரண வாயிலின் திறப்பு விழா இன்று புதன்கிழமை(31) தைப்பூச நன்னாளில் சிறப்பாக இடம்பெற்றது.

காலை-08 மணி முதல் ஆலய பரிபாலன சபைத் தலைவர் த.நடராசா தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி- ஆறுதிருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு வாயிலை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
குறித்த விழாவில்  நீர்வேலி கந்தசுவாமி ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ- இராசேந்திர சுவாமிநாதன் குருக்கள், சிவஸ்ரீ -ப.சிவானந்தக் குருக்கள், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், கலாநிதி- ஆறு. திருமுருகன் ஆகியோர் வாழ்த்துரைகள் நிகழ்த்தினர்.

இதேவேளை,மேற்படி வளைவு நிர்மாணிப்பதற்கான நிதிப் பங்களிப்பை நீர்வேலி தெற்கைச் சேர்ந்த நாகலிங்கம் சண்முகநாதன்  குடும்பத்தினர் வழங்கியிருந்ததுடன்,குறித்த தோரண வாயில் அழகுற நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும்  இங்கு குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment