//]]>

Wednesday, February 14, 2018

புன்னாலைக்கட்டுவன் கட்டுக்குள நாச்சிமார் ஆலய மஹோற்சவம் நாளை ஆரம்பம்: ஏற்பாடுகள் மும்முரம்(Videos)


பல்லாண்டுகள் பழமை வாய்ந்த யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு அன்னை ஸ்ரீ கட்டுக்குள நாச்சிமார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை வியாழக்கிழமை(15) முற்பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நாளை ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகிறது. 

தொடர்ந்தும் 15 தினங்கள் பகல் இரவு உற்சவங்களாக நடைபெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்- 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு-07 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும், 26 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல்-12 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், இரவு மாட்டு வண்டில் திருவிழாவும், 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு-07 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 28 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்-10 மணிக்கு இரதோற்சவமும், மறுநாள் வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-04 மணிக்கு கொடியிறக்க வைபவமும் நடைபெறும்.  

மஹோற்சவ நாட்களில் பகல் உற்சவம் தினமும் காலை-09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் மாலை உற்சவம் பிற்பகல்-05.30 மணிக்கும் ஆரம்பமாகும். 

இவ்வாலயத்தில் இவ்வருட மஹோற்சவத்தின் தேர்த்திருவிழாவின்  போது முதல்தடவையாக அம்பாள் அழகிய சித்திரத்தேரில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருட் காட்சி வழங்கவுள்ளார். சித்திரத் தேர் நிர்மாணப் பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகிறது. 

தேவஸ்தான ஆதீன குருவும், மஹோற்சவ குருவுமான பிரம்மஸ்ரீ ந. சபாரத்தினக் குருக்கள் தலைமையிலான மஹோற்சவ காலக் கிரியைகள் சிறப்பாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. அத்துடன் மஹோற்சவ காலங்களில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானமும்  வழங்கப்படும்.

இவ்வாலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் ஆலய நித்தியகுரு சிவஸ்ரீ குகந்தனசர்மா எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில், 

ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சாந்தி வைபவங்களுடன் ஆரம்பமாகி நாளையா தினம் முற்பகல்-11 மணியளவில் அம்பிகையின் துவாஜாரோகணம் என்று சொல்லப்படுகின்ற படைத்தல், காத்தல், அழித்தல்,மறைத்தல், அருளல் என்று சொல்லப்படுகின்ற பஞ்ச கிருத்தியங்களைக் உணர்த்தும் வகையிலான எங்களுடைய ஆகமம் வரையறுத்துள்ள மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

ஆன்மாவை உயர்ந்த நிலையில் ஏற்றிப் போற்றும் உற்சவமாக கொடியேற்ற உற்சவம் காணப்படுகின்றது.  

இந்த ஆலயத்தை அந்தணர்களாகிய நாம் நான்காவது தலைமுறையாக பரிபாலனம் செய்யும் பெரும் பேற்றைப் பெற்றுள்ளோம். அந்தவகையில் தற்போது என் தந்தையராகிய ந. சபாரத்தினக் குருக்கள் தேவஸ்தான ஆதீன குருவாகச் செயற்பட்டு  வருகிறார். 

அம்பிகையின் மஹோற்சவத்தைக் காண அடியவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்றார். 

அவர் இது தொடர்பாக எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேகக் கருத்துக்களை கீழுள்ள காணொளி இணைப்பில் காணலாம்

(செல்வநாயகம் ரவிசாந்-)







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment