ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாராகவே இருப்பதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
நேற்றுத் திங்கட்கிழமை(12) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மகிந்த ராஜபக் ஷ நிச்சயமாக அதனை நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக அதனை வழங்கமாட்டார் என எனக்குத் தெரியும்.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி ஒருபோதும் சூழ்ச்சிகளில் ஈடுபடாது. ஜனநாயக முறையிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment