வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று புதன்கிழமை(14) முற்பகல் திடீரெனச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று காலை முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்,கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தற்போதைய அரசியல் சூழலில் குறித்த சந்திப்பு முக்கியமானதொன்றாகக் கருதப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment