தமிழகத்தின் பிரபல பேச்சாளர்களில் ஒருவராகிய நெல்லைக் கண்ணன் யாழ்ப்பாணம் வருகின்றார். எதிர்வரும் 11.12.216 யாழ். நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் பிற்பகல் 4 மணிக்கு யாழ். இந்தியத் துணைத்தூதரகம் அகில இலங்கை அமுதசுரபிக் கலாமன்றத்துடன் இணைந்து நடத்தவுள்ள பாரதிவிழாவில் முதன்மை விருந்தினராக நெல்லைக் கண்ணன் கலந்துகொள்ளவுள்ளார்.
.
தமிழகம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட நெல்லைக் கண்ணனுக்குத் தற்போது வயது 71. தமிழ்க்கடல், நாவுக்கரசர், இலக்கிய இமயம், இலக்கியப் பேரரசு, நெல்லை நக்கீரன், கம்பக் காட்டாறு, வாழும் வாரியர் எனப் பல கௌரவப் பட்டங்களைப் பெற்றவர் அவர்.
.
பாரதிவிழாவில் யாழ். மண்ணில் தேர்ந்தெடுத்த சிறப்பிசைக் கலைஞர்கள் இணைந்து வழங்கும் பாரதி பாடல்கள் இசைவிருந்தும் இடம்பெறவுள்ளது. சிவஸ்ரீ. விஸ்வ பிரசன்னா குருக்கள் (நல்லூர்), சிவஸ்ரீ சோ.குமாரதாச சர்மா, சிவஸ்ரீ கு.விஸ்வசுந்தர், ஈழத்து இளைய சௌந்தரராஜன் இ.அருள்ஜோதி, ஸ்ரீ.சுலக்ஷன், ம.தயாபரன், தி.மேரி நவரத்தினம், நாதன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் இந்நிகழ்வில் பாடல்களை இசைக்கவுள்ளனர். ஆசிரியர் ஜேம்ஸ் அன்ரன் கீபோர்ட் இசையையும் ந.பிரேமானந்த் ஒக்ரோ பாட் இசையையும் கபிலன் தபேலா இசையையும் இ.இராஜேஸ்வரன் பேஸ்கிற்றார் இசையையும் வழங்கவுள்ளனர்.
நிகழ்வில் அமுதசுரபி கலாமன்ற அமைப்பாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி வரவேற்புரையையும் யாழ். இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் தலைமையுரையையும் ஆற்றவுள்ளனர்.
நிகழ்வுகள் மாலை 4 மணி தொடக்கம் 8 மணிவரை இடம்பெறவுள்ளன.
0 comments:
Post a Comment