//]]>

Thursday, December 8, 2016

தேவகோட்டை அகதிகள் முகாமில் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க ஈழ அகதிகள் அஞ்சலி (Photos)


கடந்த 06.12.2016 அன்று  இயற்கை  எய்திய  தமிழக முதல்வர்  ஜெ.ஜெயலலிதா  அவர்களுக்கு தமிழக முகாம்களில்  வாழும் அகதி    மக்கள்  கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழகத்தில்  இருக்கும்  107 அகதி முகாம்களில்  ஒன்றான  சிவகங்கை  மாவட்டம்  தேவகோட்டையில் உள்ள   இலங்கை   அகதிகள்  முகாம்  மக்கள்  மறைந்த தமிழக முதல்வர்  ஜெ. ஜெயலலிதா  அவர்களுக்கு   06.12.2016 அன்று  பி.ப 3.00 மணியளவில்  குறித்த   முகாமை  சுற்றி  ஊர்வலமாக  சென்று  மெழுகுவர்த்தி  ஏற்றி  கண்ணீர் மல்க  மௌன  அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த  துயர நிகழ்வில்  குறித்த முகாமில் வசிக்கும்  ஆண்கள்,  பெண்கள்,  குழந்தைகள்   என்று  அனைவரும்  கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதுபற்றி  குறித்த முகாமில்  வசிக்கும்    அகதி  ஒருவர்   கூறுகையில், 

2011 ம்       ஆண்டு ஜெ. ஜெயலலிதா  அம்மா  அவர்கள்  ஆட்சிக்கு  வந்ததில்  இருந்து   ஈழத்தமிழர்களுக்கு  ஆதரவான  வரலாற்று  சிறப்புமிக்க  நடவடிக்கைகளை    எடுத்து  வந்துள்ளார். தமிழக  முகாம்களில் வாழும்
அகதி மக்கள் மீது  தனி  கவனம் செலுத்தி  அதிக  சலுகைகளை  வழங்கி  வந்தார்.

தமிழகத்தில்  வாழும் அகதி மக்களுக்கு  இரட்டை  குடியுரிமை  வழங்கக்  கோரி  இந்தியப் பிரதமர்  மாண்பு  மிகு  மோடி  அவர்களுக்கு வேண்டுகோள்  வைத்திருந்தார்.   இப்படி   அவர்  எங்களுக்கு    எத்தனையோ  உதவிகளை  செய்துள்ளார்.

அந்த  உன்னத  தாயின்  இழப்பு  எங்கள்  அனைவரையும்  மீளாத்துயரில்   ஆழ்த்தியுள்ளது.  என்று  கூறினார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment